குமரியில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து அச்சங்குளம், பறக்கை, பால்குளம், சுசீந்திரம், நரிக்குளம், தேரூர், தத்தையார்குளம், மாணிக்கம்புத்தேரி குளம், புத்தளம், சுவாமிதோப்பு உப்பளம் மற்றும் நீர்நிலைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர். இந்தப் பணியின் போது 80-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டன.