குமரி அருகே சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

0பார்த்தது
குமரி மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக நாகர்கோவிலில் இருந்து மணக்குடி செல்லும் சாலையில் உள்ள புத்தளம் பகுதியில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.