நாகர்கோவில்: குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை

0பார்த்தது
நாகர்கோவில்: குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை
நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பைச் சேர்ந்த டெம்போ டிரைவர் செல்வசரண் (25), ராஜபாளையத்தைச் சேர்ந்த ரேஷ்மா (20) ஆகியோர் உறவினர்கள். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்குள் குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ரேஷ்மா தனது தாயாருக்கு தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். அதிர்ச்சியடைந்த தாயார் சென்று பார்த்தபோது ரேஷ்மா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.  திருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதால், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி