கன்னியாகுமரி மாவட்டம் ஞாலம் ஊராட்சி அந்தரபுரம் கிராமத்தில் நேற்று நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பூதலிங்கம் பிள்ளை கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.