கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு பருவங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது 2வது பருவ நெல் அறுவடை பணிகள் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், மாவட்டத்தில் இரண்டாவது பருவத்தில் நெல் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. போதிய மழை பெய்யாததால், ஒரு ஏக்கரில் 21 கோட்டை நெல் விளைவதற்கு பதிலாக 16 கோட்டை நெல் மட்டுமே விளைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.