இறச்சகுளம் அருகே மிரட்டி காரை திருடிய நபர்கள்

63பார்த்தது
இறச்சகுளம் அருகே மிரட்டி காரை திருடிய நபர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளத்தைச் சேர்ந்தவர் ராணி(48) இவர். 4 லட்சம் ரூபாய்க்கு மாருதி கார் ஒன்றை வாங்கி இருந்தார். இதற்கு நிதி நிறுவனம் ஒன்றில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பைனான்ஸ் போட்டு காரை எடுத்திருந்தார். இந்த நிலையில் காரை 2 நபர்கள் திருடி சென்றனர். ராணி அதை தட்டிக் கேட்டபோது அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின்பேரில் பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.