கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து வரும் 12 ஆம் தேதி கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பரப்புரைக்கு 5,000 பேர் வரை அனுமதிக்க வேண்டும் என தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், காவல்துறை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.