ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விரைந்து மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி, மணக்குடி தூய அந்திரேயா ஆலய பங்குத்தந்தை சார்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.