கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை செண்பகராமன் புதூர், தோவாளை, வெள்ளமடம், திர வியம் மருத்துவமனை, லாயம், தாழக் குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்வினி யோகம் இருக்காது. இந்த தகவலை செண்பகராமன்புதூர் மின்வினியோக செயற்பொறியாளர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.