கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் முடிந்த நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறுகின்றன. குமரி மாவட்டத்தில் மொத்தம் 21,466 மாணவர்கள் இந்த செய்முறை தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வு இம்மாதம் 28-ம் தேதி வரை நடைபெறும்.