கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக காளிகேசம் உள்ளது. இங்கு மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் அதிகளவு வந்து பெருஞ்சாணி அணையில் சென்று கலக்கிறது. காளிகேசத்தில் அணை கட்டி மின் உற்பத்தி செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 275 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நான்கு மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.