இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை மீட்க போராட்டம்

368பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மேலமணக்குடியில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி