கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொய்கை அணைக்கு சுங்கான்ஓடை வழியாக வரும் தண்ணீர், சிலர் அடைத்து திசை திருப்புவதால் அணைக்கு நீர்வரத்து தடைபட்டுள்ளது. இந்த தடையை சீரமைத்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து விவசாயப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.