ரப்பர் தோட்டப்பணி தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்.

1பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்டத்தில், சுமார் 4,763 ரப்பர் மரங்களில் பால் வடிப்பு பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இந்தப் பணியை தனியாருக்கு வழங்கக்கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோட்ட மேலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இந்தப் பணி தனியாருக்கு வழங்கப்பட்டால் போராட்டம் தீவிரமடையும் என தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர். காவல்துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.