கேரள மாநிலம், பூவத்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி வேன், தமிழக-கேரள எல்லையான பளுகல் அருகே காரக்கோணம் - குந்நத்துகால் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பள்ளி மாணவ, மாணவியா் 21 பேரும், பெண் பணியாளா்களான மினி, ஜோனிதா ஆகியோரும் காயமடைந்தனா். இதுகுறித்து பாறசாலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.