சுசீந்திரம் அருகே ஸ்கூட்டர் தீ வைத்து எரிப்பு.

0பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே கீழத்தேரூர் கீழத்தெருவைச் சேர்ந்த பிளம்பர் தினகரன் பெனேஷ் (45) என்பவரின் ஸ்கூட்டர் மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர், நேற்று அதிகாலையில் தீயில் எரிவதைக் கண்டு தினகரன் அதிர்ச்சியடைந்தார். தீயை அணைப்பதற்குள் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து தினகரன் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகிறார்.