குமரி மாவட்ட காவல்துறை, மே 20 முதல் குற்றச் செயல்களுக்கு எதிராக 'ஆபரேஷன் ஷீல்ட் நெட்' என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில், சந்தேக நபர்கள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என மொத்தம் 725 பேர் சோதனையிடப்பட்டனர். இவர்களில், குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த நான்கு தொடர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.