கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, நாகர்கோவிலில் இருந்து கோவா மாநிலம் மடகானுக்கு டிசம்பர் 23 முதல் ஜனவரி 6 வரை செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இதேபோல், மடகானில் இருந்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 7 வரை புதன்கிழமைகளில் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படுகின்றன.