பூதப்பாண்டி பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தாத்தா உறவு கொண்ட 57 வயது தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போதெல்லாம் சாக்லேட், கார வகைகள் வாங்கிக் கொடுத்து, பின்னர் ஒரு வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் சிறுமி தெரிவித்ததை அடுத்து, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.