கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் என். ஜி. ஓ காலணி அருகே உள்ள நகைக்கடையில் அரிவாள், கடப்பாரை கொண்டு பூட்டை உடைத்து 70 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், விசாரணையில் அவை கவரிங் நகைகள் என தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அய்யப்பன், மாய கிருஷ்ணன் உட்பட 5 பேரை சுசீந்திரம் போலீசார் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேற்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.