கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4:00 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறந்து அய்யாவுக்கு பணிவிடை நடைபெற்றது. தொடர்ந்து கொடிபட்டம் பதியை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.