கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவிலில் சில வாரங்களுக்கு முன்பு பெண் ஒருவர் சன்னிதானத்தில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் பக்தர்கள் புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைத்துள்ளது. இந்த அறிவிப்பால் பக்தர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.