தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை மார்ச் 27-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர் அகில இந்திய கோ சேவா பவுண்டேஷன் சார்பில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நடக்கும் பசு பாதுகாப்பு மகா யாத்திரையின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறார். இதை யொட்டி அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.