கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமிக்குப் பிறகு கட்டப்பட்ட கீழமணக்குடி-மேலமணக்குடி இடையேயான இரும்பு பாலம் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று அந்தப் பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலத்தை அப்புறப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.