குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் கிளை அலுவலகத்தில் குறு சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் கடந்த 2-ந் தேதி முதல் 30–ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 2025-26 நிதியாண்டில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியமாக ரூ. 150 லட்சம் வரையும், உற்பத்திச் சார்ந்த குறுந்தொழில்களுக்கு தமிழக அரசின் மூலதன மானியமாக 25 சதவீதம், கூடுதல் மானியமாக 10 சதவீதம் மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கு 5 சதவீதம் சிறப்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு 04652 225774 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.