கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தையில் நேற்று முதல் ஸ்டெம்பு ரோஸ் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. முதல் தர ரோஜா பூக்கள் ஒரு கட்டுக்கு 1,200 ரூபாய்க்கும், இரண்டாம் தர பூக்கள் 750 முதல் 800 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. சில்லறை விலையில் ஒரு பூ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வழக்கமாக 250 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படும் பூக்களின் விலை, காதலர் தினம் நெருங்குவதை ஒட்டி இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.