கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக கிராஸ் சாரதி, நந்தகுமார், மற்றும் தமிழரசு ஆகிய மூன்று பேரை சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ் லியோன் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.