ஆரல்வாய்மொழியில் மூன்று போலீசார் சஸ்பெண்ட்

1317பார்த்தது
ஆரல்வாய்மொழியில் மூன்று போலீசார் சஸ்பெண்ட்
குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் கனிமவளம் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரிகளின் அனுமதிச் சீட்டை முறையாகப் பரிசோதிக்காமல் அனுமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை கனிமவளக் கடத்தலைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி