குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் தோவாளை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆற்றுபாலம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பெரியசாமி (50) என்பவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. திருமலைபுரம் வடக்கு தெருவை சேர்ந்த அவரை போலீசார் கைது செய்து, 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.