கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஆரா மலை, காளிகேசம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் காளிகேசம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணமாக காளிகேசத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.