விடுமுறை தினத்தையொட்டி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அதிகாலையிலேயே வந்து குவிந்தனர். கடற்கரையில் சூரிய உதயத்தைக் காண காத்திருந்த அவர்களுக்கு, மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெரியாததால் ஏமாற்றம் ஏற்பட்டது. பின்னர், அவர்கள் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம் போன்ற இடங்களையும் பார்வையிட்டனர்.