விடுமுறை தினங்களில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு அதிகாலை முதல் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள் கடற்கரையில் அமர்ந்து சூரியன் உதயமாகும் அழகிய காட்சியைக் கண்டு ரசித்தனர். பின்னர், கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அதன் அழகை அனுபவித்தனர்.