கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி சப் இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் ஆண்டிதோப்பு பகுதியில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது வினோத் ராஜ் மற்றும் அனீஸ் ஆகிய இரண்டு பேர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தனர். இதை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இதன் பின் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.