கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட தடிக்காரன்கோணம் ஊராட்சியில் தவெக சார்பாக, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தோவாளை கிழக்கு ஒன்றிய தவெக செயலாளர் கோகிலா அணிஸ் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார். அவருடன் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.