கொட்டாரம் அருகே புகையிலை விற்ற பெண் கைது.

0பார்த்தது
கொட்டாரம் அருகே புகையிலை விற்ற பெண் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வினிஸ்பாபு தலைமையிலான போலீசார் கொட்டாரம் லெட்சுமிபுரம் பகுதியில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சுசீலா (58) என்பவருடைய பெட்டிக்கடையில் இருந்து 3 கிலோ 150 கிராம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சுசீலா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.