கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரையைச் சேர்ந்த திருச்சிற்றம்பலம் (52) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அறுவை சிகிச்சை செய்ய மனைவி லட்சுமி வலியுறுத்தியதாகவும், ஆனால் திருச்சிற்றம்பலம் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.