கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டை சேர்ந்தவர் மேரி லேட்டி சியா(36). இவர் குழுவில் கடன் வாங்கியிருந்த நிலையில் அதனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த மேரி விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.