குமரி: மனநலம் பாதித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கைது

61பார்த்தது
குமரி: மனநலம் பாதித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கைது
கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 54), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றார். உடனே அவர் கூச்சலிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த ரூ. 5,500 மற்றும் செல்போனை திருடிவிட்டு முருகேசன் அங்கிருந்து தப்பிவிட்டார். பின்னர் அந்தப் பெண்ணின் தாயார் வந்து வீட்டுக்கு வந்தபோது நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி