கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கீழக்கோணம் பகுதியை சேர்ந்தவர் சூசை மரியான் (வயது 70), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அன்னமரியாள் (65). இந்தநிலையில் சூசை மரியான் நேற்று முன்தினம் கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகில் புதிதாக கட்டி வரும் தங்கும் விடுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது கட்டிடத்தின் மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதனை பார்த்த அவருடன் வேலை செய்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பரிசோதித்த போது சூசை மரியான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த தென்தாரைகுளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.