குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே ரயில் மோதி மணிகண்டன் (30) என்ற இளைஞரின் சடலம் கிடந்ததாக கிடைத்த தகவலின்பேரில், நாகர்கோவில் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மது அருந்தும் பழக்கம் இருந்த மணிகண்டன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ரயில்வே போலீஸார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.