
தேங்காப்பட்டணம்: பாறை உடைப்பு 4 பேர் மீது வழக்கு ஒருவர் கைது
தேங்காப்பட்டணம் அருகே வடலிகூட்டம் பகுதியில் இன்று 15-ம் தேதி, அரசு அனுமதி இன்றி பாறைகள் உடைக்கப்பட்டு டெம்போவில் ஏற்றப்படுவதாக கிராம அலுவலர் பிரதீபுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தை பார்வையிட்டபோது, நில உரிமையாளர் அனுமதியுடன் 2 ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் பாறைகள் உடைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து புதுக்கடை போலீசார் நில உரிமையாளர், 2 ஹிட்டாச்சி ஓட்டுநர்கள் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து, சுபின் என்பவரை கைது செய்தனர்.








































