களியக்காவிளை: குமரி வந்த புஸ்லி ஆனந்துக்கு வரவேற்பு

55பார்த்தது
களியக்காவிளை: குமரி வந்த புஸ்லி ஆனந்துக்கு வரவேற்பு
தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஷ்பி ஆனந்த் இன்று 6-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகை புரிந்தார். அங்கிருந்து காரில் குமரி மாவட்ட எல்லை களியக்காவிளை வருகை தந்த மாநில பொதுச் செயலாளார் புஷ்பி ஆனந்திற்கு கட்சி சார்பில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் த. வெ. க. களியக்காவிளை பேரூர் இணைச் செயலாளர் பைஜு தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் சபின், பொதுச் செயலாளர் சுரேஷ், பேரூர் நிர்வாகிகள், வாயப்பன், யூஜின், செரின், வின்ஸ், மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து த. வெ. க நிர்வாகிகள், தொண்டர்கள் சூழ மார்த்தாண்டத்தில் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி