இந்திய மருத்துவ சங்கத்தின் மார்த்தாண்டம் கிளை மற்றும் குட்விஷன் சேவா அறக்கட்டளை இணைந்து கருங்கலில் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்திய மருத்துவ சங்கம் மார்த்தாண்டம் கிளை தலைவர் டாக்டர் மாணிக்ஸ் குமார், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் அபிஷேக் மற்றும் மருத்துவர்கள் கலந்துரையாடினர். தொடர்ந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.