புதுக்கடை பகுதியை சேர்ந்த கார்லின் சுஷ்மா (40) என்பவர் கருங்கல் பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே பைக்கில் வந்த பால் வியாபாரி ராஜேஷ் குமார் (41) மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ராஜேஷ்குமார் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.