புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை; கருங்கலில் பரபரப்பு

80பார்த்தது
புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை; கருங்கலில் பரபரப்பு
திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜமலா (26) பிஎஸ்சி நர்சிங் முடித்தவர். இவர் இனயம் பகுதியை சேர்ந்த நிதின் ராஜ் என்பவரை காதலித்து, கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி திருமணம் செய்தனர். நேற்று மதியம் 12 மணியளவில் ஜமலா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் கருங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதின் ராஜ் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். ஜமலாவின் தாயார் புஷ்பலதா மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கருங்கல் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி