புதுக்கடை பகுதியைச் சேர்ந்த ஆன்றோ என்பவர் பாலூர் சந்திப்பில் கட்டிடம் கட்ட தேவையான உபகரணங்கள் வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடையின் முன்பு ஏணியை வைத்துவிட்டு சென்றபோது, காலையில் கடையைத் திறந்தபோது ஏணி மாயமாகியிருந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலையில் இருவர் பைக்கில் வந்து ஏணியைத் திருடிச் சென்றது பதிவாகியுள்ளது. இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.