மிடாலம் கடற்கரை சாலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு அம்மன் சிலைகள், கிராம நிர்வாக அலுவலரால் மீட்கப்பட்டு கிள்ளியூர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பத்திரகாளி மற்றும் துர்கா சிலைகள் தற்போது கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.