கிள்ளியூர்: மீனவர்களுக்கு கடனுதவி கலெக்டர் வழங்கினார்

0பார்த்தது
கிள்ளியூர்: மீனவர்களுக்கு கடனுதவி கலெக்டர் வழங்கினார்
குமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், உள்ளூர் விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் நலனுக்காக பேங்க் ஆப் பரோடா வங்கி நடத்திய "பரோடா கிசான் பக்வாடா" விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று 13-ம் தேதி இரையுமன்துறையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கலந்துகொண்டு, 15 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பில் கடன்களுக்கான காசோலைகளை வழங்கினார். பேங்க் ஆப் பரோடா மதுரை மண்டல முதன்மை மேலாளர் பிரகாஷ் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி