நடைக்காவு பகுதியை சேர்ந்த பிரின்ஸ் என்பவர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி நிஷா ஜெர்லின் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் மதியம் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை கொள்ளையடித்ததாகவும், தட்டி கேட்ட தாயை தாக்கியதாகவும் கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் நிஷா ஜெர்லின் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.