குளப்புறம்: கொத்தனாரை கம்பியால் தாக்கியவருக்கு சிறை

களியக்காவிளை சோதனை சாவடி அருகே நின்று கொண்டிருந்த கொத்தனார் பாபு (57) என்பவரை, பாறசாலை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் ராஜ் (50) இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் பலத்த காயமடைந்த பாபு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து ஜஸ்டின் ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.